அதிரை டுடே:ஜுன்.01
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு அமலுக்கு பின் அரசு கட்டுப்பாடுகளுடன் படிப்படியாக தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. தொடர்ந்து இரண்டு மாத காலமாக பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவின் மூலம் தமிழகம் முழுவதும் துவங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நமது மாவட்டத்திலிருந்து இ - பாஸ் இல்லாமல் பயணிக்க பேருந்து போக்குவரத்திற்கு மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு செல்ல திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் வரை சென்று வர அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அதிரையில் இருந்து பேருந்து போக்குவரத்து இன்று ஜுன் 01 முதல் துவங்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும்போது பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments