கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட வேண்டும். மின் கட்டணங்கள், டோல்கேட் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும்வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (ஜூன்.27) தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.
அதிரையில் நடந்த போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர தலைவர் அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். நகர செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் நகர பொருளாளர் ஷேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல் மாவட்டத்தின் 5 இடங்களிலும் சமூக இடைவெளியுடன் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாப்புலர் ப்ரெண்ட் நகர தலைவர் ஜாவித் மற்றும் சமூக ஊடக அணி தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது அசாருதீன் ஆகியோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
0 Comments