அதிரை தன்னார்வலர்கள் நிர்வாகிகள் தேர்வு..!

*🌾அதிரை தன்னார்வலர்கள் நிர்வாகிகள் தேர்வு! 🌾*


அதிராம்பட்டினம் ஒருங்கிணைந்த தன்னார்வ அமைப்பு பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறது.

குறிப்பாக இரத்ததானம், வரியவர்களுக்கு உதவி,நாடோடிகளுக்கு உணவு,மருத்துவ உதவிகள், கொரோனா கால களப்பணிகள் என  பல்வேறு சமூக பணிகளை ஜாதி மத இணங்களை கடந்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கூறிய பணியை தொய்வினறி தொடர புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையை அடுத்து   நேற்று இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பின்வரும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

ஒருங்கிணைப்பாளராக 
A. அப்துல் மாலீக்
தலைவராக
A.ஹசன்
செயலாளராக
T.பைசல் ரஹ்மான்
துணை செயலாளராக
S.சமீர் அலி
பொருளாளராக
A.முனவ்வர் ஆகியோர் ஏகமனதாகத் நியமிக்கப்பட்டனர்.

*24மணி நேரமும் வாட்ஸ் ஆப் குழுமத்தை கண்காணிக்க 10நபர்கள் நியமிக்கப்பட்டு இரத்ததானம், அவசரகால தேவைகளை நிவர்த்தி செய்வர்*

இதுபோக பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது,இரத்த வகை கண்டறிய முகாம் நடத்துவது, இரத்த தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கொடையாளர்களை தயார் நிலையில் வைத்திருப்பது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.

புதிதாக தேர்வாகிய நிர்வாகத்தினருக்கு பழைய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்ததோடு அல்லாமல் இன்னும் உத்வேகத்துடன் செயலாற்ற உள்ளதாக தெரிவித்தனர்.

சமூக இடைவெளி விட்டு நடைபெற்ற இந்த நிர்வாக தேர்வில், முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

🩸மேலும் உங்களின் அவசர கால தேவைகளுக்கு எங்களை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள🩸 👇🏻

☎️சமீர் பின் அகமது:-9787574715
☎️அசார்:-8667886349
☎️அனஸ் அகமது:-8778096145
☎️ஃபாதில்:-9791910938

Post a Comment

0 Comments

'/>