அதிரை டுடே:ஜூன்.23
அதிரை மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் அறிந்து, சமூக நலனை கறித்தில்கொண்டு துவங்கபட்ட இந்த சமூக ஊடகம் கடந்து வந்து இன்றுடன் ஓராண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அதிரை டுடே குழுமத்தினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக ஊடகம் என்பது,அற நெறிகளை போற்றி, சமதர்ம கொள்கையிலும்,கோட்கோட்பாடுகளிலும் உண்மையும் நேர்மையாக பயணித்து மக்களுக்கு பயன்பெற எத்தனிப்பது அதற்கான செய்திகளை கொண்டுபோய் சேர்ப்பது.
சுய, விருப்ப, வெருப்புகளை கடந்து, சாதிய மத, போக்குகளை பின்னுக்குதள்ளி, சமூகத்தியற்கான முன்னேற்ற பாதைகளை வகுத்து, அதன்பால் செய்திகளை தொகுத்து வழங்குவதே
சாலச்சிறந்தது,
அதன்பால் அதிரை டுடே கடந்துவந்துள்ளது என்பதினை நான் நம்புகிறேன். இத்தருணத்தில் அதிரை நியூஸ் சமூக ஊடகத்தினையும் நினைவு கூற கடமைபட்டுள்ளேன்.
ஒரு சில அதிரை பெயரில் இயங்கும் ஊடகங்கள் பாதை மாறி பயணிப்பதை நான் அறிகிறேன். எக்கட்சியினரையும் சாராமல், தனித்துவமாக விளங்கி அனைவருக்குமான பொதுவான மக்கள் நலன்நாடியவர்களாக இயங்க வேண்டும் என்பதே அவா.
அவ்வகையில் அதிரை டுடே, அதிரை நியூஸ் இரு சமூக ஊடக நண்பர்கள் தத்தமது செய்திகளை கடமை உணர்வோடு செய்தியினை வெளியிட்டு வருகிறீர்கள்.
அவர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓராண்டுகளை கடந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்கள் சேவை, மக்களுக்கு தேவை இன்னும் பல ஆண்டுகள் வலம்வர வாழ்த்தி வலியுறுத்தி மகிழ்கிறேன்.
பசுமை ஜியாவுதீன்
0 Comments