துபை,குவைத் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!




அதிரை டுடே மே 2.   துபாய்,அபுதாபி,சார்ஜா, போன்ற UAE நாட்டின் வேலைக்கானகுடியுரிமை விசாவில் உள்ளவர்கள். இந்தியாவிற்க்கு விடுப்பில் வந்தவர்கள். திரும்ப UAE க்கு போகவேண்டும் என்றால் கீழ்க்கண்ட இணையதளத்தில் போய் பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.ஆகையால் பதிவு செய்யாமல் விமான பயண சீட்டு எடுக்க வேண்டாம்.

https://www.mofaic.gov.ae/en/Services/Twajudi-Resident


குவைத் இந்திய தூதரக முக்கிய அறிவிப்பு; தாயகம் திரும்ப விரும்பும் நபர்கள் விபரங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்:

குவைத்தில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பினால் குவைத் இந்திய தூதரகம் சார்பாக வெளியிட்டுள்ள இணைய தளத்தில் தங்கள் விபரத்தை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான செய்தியை அதிகாரிகள்  அதிகாரபூர்வமாக தளத்தில் காலையில் வெளியிட்டுள்ளனர்.

இந்திய தூதரகத்தின் இணையதள link:

http://indembkwt.com/eva/

மேலும் தாயகம் திரும்புவதற்கு விருப்பமுள்ள இந்தியர்கள் விபரங்கள்  சேகரிப்பதே இதன் நோக்கம் என்றும், இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு எப்போது முடிவு எடுக்கிறதோஅப்போது அது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தூதரகம் வலைத்தளம் மற்றும் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்குகளில் அறிவிப்பை வெளியிடும் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தமிழக அரசு நேற்று அறிவித்துள்ள இணைய தளத்திலும் உங்கள் விபரங்களை நீங்கள் பதிவு செய்யலாம்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் நாடு திரும்ப தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள இணையதளத்தின் Link:

https://nonresidenttamil.org/home

Post a Comment

0 Comments

'/>