குவைத்தில் தவிக்கும்
குவைத்தில் பல்வேறு காரணங்களால் சிக்கி தவிக்கும் இந்தியரை இலவசமாக இந்திய அனுப்பி வைக்க தயார் என்று குவைத் அரசின் வெளியுறவுத்துறைத் துறை சார்பில் இந்தியாவை அறிவித்துள்ளதாகவும். இது தொடர்பாக கடிதத்தை குவைத்திற்கான இந்திய தூதுவர் ஜாசீம்-அல்-நஜீம் இந்திய வெளியுறவுத் துறையிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது வழங்கியுள்ள பொதுமன்னிப்பு பயன்படுத்தி தாயகம் திரும்புவதற்கு ஆவணங்கள் சரிசெய்து காத்திருக்கும்
இந்தியர்களுக்கு இலவசமாக உணவு, தங்குவதற்கு இடமும் வழங்கியுள்ளது. மேலும் அவர்கள் தாயகம் திரும்பும் நேரத்தில் இலவசமாக விமானப் பயணச்சீட்டு வழங்கபடும் என்று குவைத் அரசு முன்னரே அறிவித்துள்ளது. இதன் மூலம் 12,000 இந்தியர்கள் வரையில் பயனடைவார்கள்.
இந்நிலையில் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் இந்தியர்களை குவைத் அரசின் செலவில் இலவசமாக அழைத்து வருகிறோம் என்று உத்தரவாதம் வழங்கியுள்ளதாக மேற்குறிப்பிட்ட புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தற்போது குவைத் அரசு சார்பில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வரும் நடவடிக்கைகள் முடிந்ததும், இந்த மாதம் பாதியில் இந்த திட்டத்தை செயல்படுத்த குவைத் திட்டம் தீட்டியதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவைத்தில் கொரோனவால் பாதிக்கபடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையிலும், மேலும் பாதிக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக உள்ள சூழ்நிலையில் இந்தியர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான வெளிநாட்டு தொழிலாளர்களை தங்கள் தாய்நாட்டுகளுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் அனுப்புவதன் மூலமாக உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளில் எழும் அழுத்தத்தை குறைக்க முடியும் என்று குவைத் அரசு கருதுகிறது. இந்தநிலையில் குவைத் அரசு இந்தியாவுக்கு இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 Comments