தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி உரை
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என முதல்வர் பழனிசாமி உரை நிகழ்த்தி வருகிறார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 266 பேருக்கும், கடலூரில்122 பேருக்கும் நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தையில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவியதே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வாயிலாக சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவது தொடர்ந்தே வருகிறது. அதிலும், கடந்த ஒரு வாரமாக அதன் தாக்கம் அதி தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் தடுப்பு பணிகள் குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது;
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கொரோனா தடுப்பு பணிகள் நடைபெறுகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பு பணியை ஒருங்கிணைக்க 12 உயர்நிலை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.என்றுதெரிவித்தார்.
0 Comments