அதிரையில் அடிக்கடி அறுந்து விழும் மின் கம்பிகள்..! விழிக்குமா அதிரை மின் வாரியம்..?

அதிரை கடற்கரை தெருவில் இரவு 9.00 மணியளவில் தர்கா அருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அருந்து விழுந்துள்ளது. அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கபட்டுள்ளது. இதை கண்டு விரைந்து செயல்பட்ட கடற்கரை தெரு இளைஞர்கள் சிலர் அருந்து விழுந்த மின்கம்பி சுற்றி செங்கல் வைத்து மக்களை எச்சரிக்கை செய்து உள்ளனர்.


இளைஞர்களின் தகவலின் கடற்கரை தெரு என்.எம். சாகுல்ஹமீது அவர்கள் மின் கம்பியை சரி செய்துள்ளார்கள்.

கஜா புயலுக்கு பின் புதிய கம்பிகளை உபயோகபடுத்தாது பழைய கம்பிகளை போட்டதன் விளைவு இது போன்ற சம்பவங்கள் அதிரையில் பல தெருக்களில் பரவலாக நடைபெற்று வருகிறது.


 அதிரை மின்சாரத்துறை AE.அவர்கள் அதிரை முழுவதும் உள்ள பழைய பயன்படுத்த தகுதியில்லாத மின் கம்பிகளை மாற்றி தரவேண்டுமேன்று. அதிரை மக்களின் சார்பாக அதிரை டுடே இணையதள செய்தியின் மூலம் கோரிக்கை வைக்கின்றோம்.

Post a Comment

0 Comments

'/>