அதிரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.


அதிரை டுடே:மே.19
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

அதிரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
புலம்பெயர்ந்த தொழிலாளர் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கிடவும்,
விவசாயிகள் மீனவர்கள் கடன்களை முழுமையாக ரத்து செய்திடவும், கொரானா நெருக்கடியை சமாளிக்க குடும்பத்திற்கு ரூபாய் 10000 ஆயிரம் வழங்கிடவும், தொழிலாளர் நலச் சட்டத்தை சீர் குலைக்காதே என்ற பல கோரிக்கையை முன்வைத்து அதிரையில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அதிராம்பட்டினம் நகர செயலாளர் என்.காளிதாஸ், து.செயலாளர் எஸ்.பன்னீர் செல்வம் இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் கே.ஹாஜாமைதின், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் எ.பசிர் அகமது, முகமது இக்பால், மீராசாகிப், முகமது பாரூக் சுப்பிரமணியம், கோபி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

'/>