அதிரையில் ஊரடங்கு தளர்வு எப்பொழுது..? அதிரை மக்களின் கோரிக்கை ஏற்க்கபடுமா..?


அதிரை டுடே மே.19: கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் அதிரையில் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்ததால் நகரின் பல பகுதிகள் தனிமைபடுத்தப்பட்டு இருந்த நிலையில் இருந்தது. நேற்றைய தினம் அந்த தடுப்புகளில் சில பேரூராட்சி நிர்வாகத்தால் அகற்றம் செய்யப்பட்டது.


அதிரையில் கொரோனால் அழைத்துச் செல்லப்பட்ட கடைசி நபரும் குணமடைந்து வீடு திரும்பி மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை முழுமையாக தடுப்புகளை அகற்றம் செய்யதாது ஏன்..?

தமிழக அரசு கொரோனா நோய் தொற்று இல்லாத ஊர்களுக்கு நிபந்தனைகளுடன் இரவு 7 மணி வரை சில வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்திருந்தது. அது போல ஊரடங்கு தளர்வு அதிரைக்கு வரதாது ஏன்..?

அதிரையில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்டும் என்பதை தமிழகத்தின் பிற பகுதிகளில் இரவு 7 மணி வரை செயல்படுவது போல் அதிரையில் ஊரடங்கு தளர்வு எப்போது ஏற்படும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்பாகவும் குற்றசாட்டகாவும் உள்ளது.

நோன்பு பெருநாளுக்கு 5 நாட்களே மீதம் உள்ள நிலையில் அரசு அதிகாரிகள் வணிக வளாகங்கள் மற்றும் சமுக இடைவெளியுடன் பெருநாள் திடல் தொழுகை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் செயல்படுத்துவார்களா..? பொருத்து இருந்து பார்ப்போம்..!

Post a Comment

0 Comments

'/>