கணவர் மற்றும் இரு குழந்தைகள் வீட்டில் இல்லாததால், பீதியடைந்த கோவிந்தம்மாள், அருகாமை வீட்டாருடன், அவர்களை தேடினார்; போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், வடமங்கலம் பகுதியில், விவசாய கிணற்றின் அருகே உள்ள மரத்தில், ஆறுமுகம், துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். தகவலறிந்து சென்ற ஸ்ரீபெரும்புதுார் போலீசார், குழந்தைகளை காணாததால், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், கிணற்றில் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.சிறிது நேரத்திற்கு பின், தீயணைப்பு வீரர்கள், ஷாலினி மற்றும் சேதுராமன் உடல்களை மீட்டபோது, இருவரும், ஒரே கல்லில், கயிறால் கட்டப்பட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார், உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் கூறியதாவது:ஆறுமுகம், கூலி வேலை செய்தது மட்டுமின்றி, சாமியாடி குறி சொல்பவராகவும் இருந்துள்ளார். நேற்று காலை, தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், கோவிந்தம்மாள் வீட்டில் இருந்து வெளியேறி, வேலைக்கு சென்றுள்ளார்.ஆனால், மனைவி கோபித்து, தன்னை விட்டு எங்கோ சென்று விட்டார் என நினைத்து, குழந்தைகளை கொலை செய்து, ஆறுமுகம் தற்கொலை செய்திருக்கலாம்.அல்லது, சாமியாடி என்பதால், குழந்தைகளை நரபலி கொடுத்தாரா அல்லது வேறு காரணமா என, விசாரித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments