தொண்டி வடக்கு தெருவை சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் சதாம் உசேன்(27) இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து போதைக்காக சில மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். பிறகு அதே இடத்தில் மயங்கி உள்ளர். அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிர்இழந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் காவல்துறை உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் இது தொடர்பாக ஏஎஸ்பி புகழேந்தி கணேஷ் உத்தரவின் பேரில் தொண்டி நகர ஆய்வாளர் எழில்அரசி அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
வழக்கு சம்மந்தமாக மருந்து கடை உரிமையாளர் பிரபு தொண்டி ஓடாவி தெருவை சேர்ந்த முகமது சியாத், மலுங்கு சாகிபு தெரு முகமது பயாஸ்தீன்.ஆகியோரை போலிசார் கைது செய்துள்ளனர்..!
மரணம் அடைந்தவர்க்கு திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆகிறது அவரது மனைவி 7 மாத கற்பிணியாக உள்ளார்.
0 Comments