சீமான் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும்.

மத்திய அரசு  கொண்டுவந்துள்ள குடியிரிமை திருத்த சட்டத்தினை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 22ந் தேதி  கோவையில்  பொதுக்கூட்டத்தில் பேசிய,நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் மீது  தேச துரோக வழக்கை மத்திய அரசின் தூண்டுகோளின் பெயரில்,தமிழக அரசு  பதிவு செய்துள்ளது மிக கண்டிக்கதக்கது.
தன்னெழுச்சியாக களத்திற்கு வந்து மக்கள் போராடினார்கள்.

அப்போராட்டத்தினை ஆதரித்து, பல்வேறு சமூக ஆர்வலர்கள், அறிஞர்  பெருமக்கள் இச்சட்டத்தினை கண்டித்து, சனநாயக வழியில் நின்று குரல் எழுப்பினார்கள்.

அவ்வகையில்தான் சீமான் அவர்களும் அறத்தின் வழிநின்று, பாஷிச நயவஞ்சகத்தனத்தை சுட்டிகாட்டி, மக்களுக்கு ஆதரவாக கண்டித்து குரல் தந்தார்.

தற்பொழுது சீமானை மட்டும் குறிவைத்து தேச  வழக்கை புனைய வேண்டியம் அவசியம் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏன் ஏற்பட்டது.

இரண்டு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் வகையில் பேசியதாக வழக்கு போடப்பட்டுள்ளது என்பது, சனநாயக படுகொலை,

காரணம் இச்சட்டமே இரண்டு தரப்பினருக்கும் பிரிவை ஏற்படுத்தும் வகையிலும், இந்தியாவின் பன்முகதன்மையை சீரழிக்கும் வகையில்தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. என்பதை மக்கள் அறியாமல் இல்லை.

மத்திய மாநில அரசுகளின் கையாலகத்தனத்தை பேசினாலே, தேச வழக்கும் பாயும் என்றால்.

சனநாயக விதி மீறலை அரசே முன்னின்று வழிகாட்டுவது ஏற்புடையதல்ல,
சனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்து அறவழியில் நின்று போராடும்  நோக்கத்தை கோரிக்கையை, அரசு கவனித்து அப்பிரச்சினைக்கு தீர்வை தர முயல வேண்டுமே தவிர, அடக்கி, ஒடுக்கி, சட்டத்தின் வழியே கொடு்ங்கோல் புரிய எத்தணிப்பது அரச பயங்கரவாதம்.
ஆகையினால் உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் மீது போடபட்டுள்ள வழக்கை திரும்ப பெறவேண்டும்.

நீதி வழியில் அல்லாமல் அநீதியின் வழியே இந்த அரசு தயங்காது நடவடிக்கை எடுக்க முன் வருமாயின்,
மீண்டும் தொடர்  போராட்டத்தினை கையில் எடுத்து போராடுவோம் என்பதினை மத்திய மாநில அரசுக்கு எச்சரிக்கை தருகிறோம்.

இவண்
நாம் தமிழர் கட்சி
அதிராம்பட்டிணம் நகரம்,
பட்டுக்கோட்டை சட்மன்ற தொகுதி.

Post a Comment

1 Comments

  1. வீரத்தின் விளை மண், அதிரையே.....
    தங்களின் இப்பணி சிறக்க என் பிரார்த்தனை.

    ReplyDelete

'/>