அதிரை டுடே:மே.09
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் இணையதள மாநாடு ஏன்? எதற்கு?
அநியாயகார ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்புவதே தீமையை தடுக்கும் முதல் நிலை நாமும் நம்முடைய சந்ததியும் சுதந்திரம் நீதி பாதுகாப்போடு வாழ நமது முன்னோர்களும் முப்பாட்டன்களும் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்து வெள்ளையனை வீழ்த்தி போராடிபெற்ற நமது இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட பன்முக தேசத்தை கொள்ளைப்புறமாக நுழைந்து வர்ணாஸிரமம் என்னும் நாசகார இந்து ராஷ்ட்ராவை உருவாக்க நினைக்கும் பாசிசத்தை ஆர்.எஸ்.எஸ் என்னும் சங்க பரிவாரத்தின் சப்த நாடிகளை ஒடுக்கி தேசத்தை மீட்கவே இந்த இணையதள மாநாடு.
மோடியின் இரண்டாம் கால ஆட்சியில் இந்து ராஷ்டிராவிற்கான செயல் திட்டங்கள் முன்பை காட்டிலும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது, 2025 ல் இந்து ராஷ்டிரா என்னும் பாசிசத்தின் இலக்கை நோக்கி வேகமாக செயல்படுவதை நம்மால் காண முடிகின்றது.
இந்து ராஷ்டிராவின் முதல் இலக்கு இந்த தேசத்தை நேசிக்கும், தேசத்தின் பண்முகதன்மை காக்க போராடும் முஸ்லிம்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் நடுநிலை ஜனநாயகவாதிகள் தான் அதனால் தான் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய ஜனநாயக சக்திகளுக்கும் எதிராக பாசிச பாஜக அரசின் அராஜக நடவடிக்கைகள் இந்த கொடூர கொரோனா சோதனை காலகட்டத்திலும் தலைவிரித்தாடுகிறது இந்த நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கூட நமது பாசிச எதிப்பு பயணப் பாதையில் பின்தங்கிவிடக் கூடாது என்ற அடிப்படையில் "ஊரடங்கு பாசிசம்" என்ற கோஷத்தை முன்வைத்து மோடி அரசின் திரைமறைவு திட்டத்தை தோலுரிப்போம்! என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த இணையதள மாநாட்டை நடத்துகிறது.
ஊரடங்கு பாசிசத்தை எதிர்த்து உரத்த குரல் எழுப்பும் இந்த ஆன்லைன் இணையதள மாநாட்டிற்கு உங்களின் மேலான ஆதரவினை அளிக்க வேண்டும் என்றும், நாமும் நமது குடும்பத்தார்களும். நமது நண்பர்களும். இந்த இணையதள மாநாட்டை LIVE வாகப் பார்க்க வேண்டும். என்றும் மேலும் பாசிசத்தை எதிர்ப்பதில் முதன்மையான பங்காளிகளாக கைகோர்க்க வேண்டும் என்றும் அன்போடு அழைக்கிறோம்.
FB Live: popularfrontofIndia official
https://www.facebook.com/popularfronttamilnadu/
நாள்:10 மே 2020 நேரம்: காலை 11 மணி
0 Comments