அமீரகத்தில் பணிபுரியும் இந்தியர்களை வீட்டிற்கு அனுப்பினால் சிறப்பு விமானத்திற்கான செலவுகளை நிறுவனங்களே ஏற்கவேண்டும்!
அமீரக வாழ் இந்தியத் தொழிலாளர்களை சிறப்பு விமானம் மூலம் தாயகம் அனுப்பும் அமைப்பு அல்லது கம்பெனிகள் சிறப்பு விமான மற்றும் ஊழியர்களின் 7 நாள் தனிமைப்படுத்தலுக்கான செலவுகளை நிறுவனங்களே ஏற்கவேண்டும் என துபாயிலிருக்கும் இந்தியத் துணைத் தூதரக தலைமை அதிகாரி ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் சிறப்பு விமானங்களுக்கு துணைத் தூதரகம் அனுமதியளிப்பதற்கு முன்பாக நிறுவனங்கள் ஊழியர்களின் விமான டிக்கெட்டை ஏற்பதோ, அவர்களிடம் ஏதேனும் கட்டணங்கள் வசூலிக்கவோ கூடாது என தூதரகம் அறிவித்துள்ளது.
0 Comments