தொழுகைக்கு பள்ளிவாசல் திறப்பு !

விரைவில் அரபு நாடுகளில் தொழுகைக்கு பள்ளிவாசல் திறப்பு !
கடந்த சில மாதங்ககளாக கொரோனா வைரஸ் நோய் காரணமாக.
அரபு நாடுகளில் பள்ளிவாசலில் மக்கள் தொழுகைக்கு அனுமதி இல்லை.
 சவுதி அரேபியாவில் மே31 ஞாயிற்றுக்கிழமை முதல் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

(மக்காவை தவிர)
1. பாங்கு சொல்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்னால் பள்ளி திறக்கப்படும்.
தொழுகை முடிந்து 10 நிமிடத்திற்குப் பிறகு பள்ளிவாசல் மூடப்படும்.
2. பாங்கு மற்றும் இகாமத்திற்கும் இடையில் பத்து நிமிடம் தான் இருக்கும்.
3. தொழுகை நேரத்தில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருக்கும்.
4.குர்ஆன் மற்றும் புத்தகங்கள் தற்காலிகமாக மசூதிகளிலிருந்து அகற்றப்பட்டிருக்கும்.
5. தொழுகையை முடித்து செல்பவர்கள் 2 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொருவராக  செல்ல வேண்டும்.
6. ஒவ்வொரு வரிசைக்கு பிறகு ஒரு வரிசை விட்டு விடுங்கள்.
7. குடி தண்ணீர் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் அகற்றப்பட்டிருக்கும்/மூடப்பட்டிருக்கும்.
8. மசூதிகளில் உணவு மற்றும் தண்ணீர் வினியோகிக்க கூடாது.
9. கழிவறை மற்றும் ஒழு செய்யும் இடங்கள் மூடப்பட்டிருக்கும்.

ஜூம்ஆ தொழுகையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...

1. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு மசூதிகளைத் திறந்து.

 தொழுகைக்கு 20 நிமிடங்களுக்குப் பிறகு அவற்றை மூடுவது.

 2. தொழுகையுடன் வெள்ளிக்கிழமை பிரசங்கம்.

15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யா அல்லாஹ் உலகம் முழுவதிலும் பள்ளிவாசல் திறந்து.
தொழுகை கூடிய பாக்கியத்தை மக்களுக்கு கொடுத்து விடு யா அல்லாஹ்..

Source: @Saudi_Moiaசவூதி அரேபியா இஸ்லாமிய துறை அமைச்சகம்...



Post a Comment

0 Comments

'/>