அதிரை டுடே:மே.16
அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் துவங்கப்பட்டு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையி இக்குழுமத்தின் வாயிலாக அதிரை பகுதியில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வரும் நிலையில் குறிப்பாக தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக் உதவி செய்தல், ரமலான் மாதத்தில் வருமானம் குறைவாக உள்ள பள்ளிவாசல்களுக்கு உதவி செய்தல், இரத்த தானம் உதவி, மருத்துவ உதவி, நிலவேம்பு கசாயம் வழங்குதல், அதிரை பகுதி பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளை வாட்சப் குழுமத்தின் வாயிலாக அதன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் அரசு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புனித ரமலான் மாதத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 85 குடும்பங்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்க டோக்கன் மூலம் வினியோகிக்கப்பட்டது.
வாட்சப் குழுமத்தின் வாயிலாக பொருளாதார உதவிகளை செய்த அனைவருக்கும் அதன் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். இது போல் பல்வேறு உதவிகள் செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வங்கிட அதன் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
0 Comments