தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 145.48 கோடி நிவாரண நிதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.42 கோடி நன்கொடையாக வந்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு நன்றி.
0 Comments