தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இன்று (மே 08) புதிதாக 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009 ஆகவும், பலி எண்ணிக்கை 40 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 399 பேர். தமிழகத்தில் மொத்தம் 6,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36 அரசு ஆய்வகங்களும், 16 தனியார் ஆய்வகங்கள் என 52 ஆய்வகங்கள் மூலமாக இன்று மட்டும் 13,980 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் இதுவரை 2,16,416 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. சோதனைகள் அதிகரிப்பதால் தான் பாதிப்பு அதிகமாகிறது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
0 Comments