தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடசொல்லி ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தி.மு.க, தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட ஐகோர்ட்டின் உத்தரவை வரவேற்கிறோம். மக்களின் உயிர்நலன் மீது அக்கறை கொண்டு பிறப்பித்த ஐகோர்ட் உத்தரவை தி.மு.க வரவேற்கிறது. மக்களின் உயிரை பணயம் வைக்காமல், ஐகோர்ட் உத்தரவை நீர்த்து போகசெய்யாமல் இருக்க உத்தரவை ஏற்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் முயற்சியை அ.தி.மு.க., அரசு கைவிட வேண்டும் என கூறி உள்ளார்.
SDPI தமிழ் மாநில தலைவர் வரவேற்பு
டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவுக்கு SDPI கட்சி தமிழ் மாநில.தலைவர் நெல்லை முபாரக் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: மதுக்கடைகளை திறக்க கூடாது என போராடிய பெண்களுக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என கூறி உள்ளார்.
0 Comments