ஜூலை 1 - 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வு
புதுடில்லி: சி.பி.எஸ்.இ.,10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் 15 வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால், சி.பி.எஸ்.இ.,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 15 ம் தேதி வரை நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
0 Comments