தமிழகதில் ஊரடங்கு முடியும் வரை மதுபானக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு.


அதிரை டுடே:மே.08
தமிழக அரசு உத்தரவுப்படி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள், பல நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன.

கொரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம் ஆன்லைனில் மது விற்பனைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments

'/>