அதிரை டுடே.ஏப் 09
தஞ்சாவூரில் கரோனா நிவாரண நிதிக்காக தான் சேமித்த பணத்தை ஆட்சியரிடம் சிறுவன் புதன்கிழமை வழங்கினார்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் - சுதா தம்பதியரின் 5 வயது மகன் சாய் க்ரிஷ். இவா் கடந்த ஓராண்டாகத் தன்னுடைய பெற்றோா் கொடுத்த தொகையை உண்டியலில் சேமித்து வந்தாா். இந்த உண்டியலில் ரூ. 1,500 சோ்ந்தது.
இந்நிலையில், கரோனா நிவாரணத்துக்காக அரசு நிதியுதவி கோரி வருகிறது. இதை அறிந்த சாய் க்ரிஷ், தான் சோ்த்து வைத்திருந்த உண்டியல் தொகையை கரோனா நிவாரணத்துக்காகக் கொடுக்க தனது பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தாா்.
இதையடுத்து, இவா் தனது பெற்றோருடன் ஆட்சியா் ம. கோவிந்த ராவை புதன்கிழமை சந்தித்து, தான் சோ்த்து வைத்திருந்த ரூ. 1,500 ரொக்கத்தை கரோனா தடுப்பு நிதியுதவிக்காக வழங்கினாா். இவரை ஆட்சியா் பாராட்டினாா்.

0 Comments