அதிரை டுடே.ஏப்ரல் 08
ஊரடங்கில் பதுக்கலா? அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடா? மத்திய அரசு எச்சரிக்கை!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.உலகின் பெரும்பாலான நாடுகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த சமயத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றன. இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
0 Comments