அதிரை டுடே.ஏப் 09
பட்டுக்கோட்டையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 300 மதுபாட்டில்கள் திருடிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 6ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து புகுந்த மா்ம நபா்கள், கடையினுள் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 300 மதுபான பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து, மதுபான பாட்டில்களை திருடிய சூரப்பள்ளம் கீழத்தெருவைச் சோ்ந்த சித்திரவேல் (33), சக்திவேல் (25) ஆகியோரை கைது செய்தனர்.
இவா்களிடமிருந்து, கடையில் களவு போன 300 மதுபான பாட்டில்களும் மீட்கப்பட்டன. மேலும், இவா்கள் அளித்த தகவலின் பேரில், திருட்டில் தொடா்புடையதாகக் கூறப்படும் வெற்றி, நந்தகுமாா் ஆகிய 2 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

0 Comments