வெளிநாடுகளில் வாழும் 3,336 இந்தியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்: முதலிடத்தில் குவைத்தில் 860 இந்தியர்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் வெளிநாடுகளில் 3,336 இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுனர்.
மேலும் 25 பேர் இறந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய அறிக்கையின்படி, குவைத்தில் 860 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் 634 பேரும், கத்தாரில் 420 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் 308, ஓமானில் 297, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 238, சவுதி அரேபியாவில் 186 மற்றும் பஹ்ரைனில் 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் இத்தாலியில் 91 இந்தியர்கள், மலேசியாவில் 37, போர்ச்சுகலில் 36, கானாவில் 29, அமெரிக்காவில் 24, சுவிட்சர்லாந்தில் 15 மற்றும் பிரான்சில் 13 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .
கொரோனா வைரஸ் பாதிப்பினால் சில நாட்களுக்கு முன் குவைத்தில் ஒரு இந்திய நாட்டவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments