மலேசியாவின் லங்காவி தீவில் படகு மூலம் நுழைய முயன்ற மியான்மரின் ரோஹிங்யா அகதிகள் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலாவுக்கு பெயர் போன லங்காவி தீவுக்கு 70 நாட்டிகல் மைல் தொலைவில் மலேசிய விமானப்படை விமானம் இந்த படகை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
அந்தப் படகில் 200 பேர் வரை இருந்ததாகவும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உணவுப் பொருள்களை அளித்ததாகவும் மலேசிய அதிகாரிகள் கூறினர்.
0 Comments