உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் திணறி வருகின்றனர். இந்த வைரசுக்கு இன்னும் மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு ஒரே வழி தனிமைப்படுத்துதல், சமூக விலகலை கடைப்பிடித்தல் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.பி பாஸ்கர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த 15ம் தேதி மோகனூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பங்கேற்றார். விழாவில் பொதுமக்கள் , அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் பங்கேற்ற 2 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்திருக்கிறது.
அவர்களை பரிசோதித்த போது கொரோனா தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்த தகவல் நாமக்கல் எம்.எல்.ஏ கேபிபி பாஸ்கர் உள்பட அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எம்.எல்.ஏ கேபிபி பாஸ்கர் தன்னைத்தானே தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். மொத்தம் 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
0 Comments