கொரோனவால் ஆண்கள் அதிகம் மரணமடைவது ஏன்..?

உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பற்றிய பிரிட்டன் தேசிய புள்ளிவிவரம் ஆணையம் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களே இரண்டு மடங்கு இறக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்துள்ளது.

மேலும் இது சீனாவில் நடத்தப்பட்ட ஆய்விலும் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா பாதித்த ஆண்களில் 2.8% பேர் இறந்துள்ளனர். ஆனால் பெண்கள் 1.7% பேர் இறந்துள்ளார். இதே போன்று சில ஒற்றுமைகள் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சவுத் கொரியா தற்போது பிரிட்டனிலும் இதே ட்ரெண்ட் தொடர்கிறது.
இத்தாலியில் கொரோனவால் இறந்தவர்கள் 71% பேர் ஆண்களே. கடந்த வியாழக்கிழமை ஸ்பெயினில் வெளியான தகவலின்படி பெண்களை விட ஆண்கள் இரண்டு மடங்கு கொரோனாவால் இருந்துள்ளனர் என்பது என்பதை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் சுமார் 4,122 பேர் மரணமடைந்துள்ளனர் இதில் 2,523 பேர் ஆண்கள் மற்றும் 1,599 பேர் பெண்கள். இதில் ஏன் ஆண்கள் அதிகம் மரணம் அடைகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் சீனாவில் இருக்கும் ஒரு புள்ளிவிவரத்தை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளனர் ஆண்கள் பெரும்பாலும் புகை பிடிப்பதால் அவர்கள் நுரையீரல்கள் பாதிப்படைந்து இருக்கும். சீனாவில் 50 சதவீதம் பேர் புகை பிடிக்கின்றனர் ஆனால் 2 சதவிகித பெண்கள் மட்டுமே சீனாவில் புகை பிடிக்கின்றனர். ஆகவே புகைபிடிப்பவர்கள் மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் இதனால் அதிகம் தாக்கப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments

'/>