அதிரை டுடே.ஏப்ரல் 12
அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - கொரோனா சட்ட உதவி குழுவின் பணிகள்..!
இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக இன்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களுக்கு தேவையான நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பில் அதிரைக்கு அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழு மூலமாக 25க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு அரசிடமிருந்து வாகன அனுமதி பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு ஏற்படும் தடைகளுக்கு அவ்வப்போது அரசுடன் இணைந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.
இந்தப் பணிகள் அனைத்தையும் அரசுடன் இணைந்து இக்குழு செய்து வருகின்றது. அதிரைக்கு கிடைக்கவேண்டிய அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி கிடைக்க பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவிக் குழு முழு முயற்சி எடுத்து வருகின்றது.
இவண்
முஹம்மது ஜாவித்,
ஏரியா தலைவர்,
அதிரை ஏரியா,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
0 Comments