அதிரைடுடே,ஏப்13:
ஏப்ரல்12 அன்று 50 குடும்பங்களுக்கு பால், வழங்கல் அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஊரடங்கு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். பால் விற்பனைக்கு தடை விதிக்கப்படாவிட்டாலும், மதியம் 1 மணியுடன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளதால் பலரும் மொத்தமாக பால் பாக்கெட்டுகளை வாங்கி வைத்து விடுகின்றனர். இதனால் பலருக்கு பால் கிடைக்காத சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி ஊரடங்கால் அன்றாடம் வேலை செய்து பொருள் ஈட்டும் கூலித்தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் நோக்கில், அதிரையை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழுமம் சார்பில் பால் வழங்கப்பட்டது. அட்மின்கள்
தலைவர் : U.நாகூர் கனி
து.தலைவர் : M.முகமது காசிம்
செயலாளர் :SM.சாகுல் ஹமீது
பொருளார் : M.இக்பால்
து.செயலாளர் : M. நஷீர் அகமது
0 Comments