முத்துப்பேட்டை தெற்கு தெரு தூய்மை பணியாளரை கவுரவித்த பொதுமக்கள்


அதிரை டுடே:ஏப்.19
முத்துப்பேட்டை தெற்கு தெருவில் தினமும் சிறப்பாக தூய்மை பணி செய்து வரும் தூய்மை பணியாளர் சகோதரி பிரமாயி அய்யாவுக்கு பாராட்டு தெரிவித்து அவர்கள் குடும்பத்திர்க்கு உதவி செய்யும் வகையில் 25 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கமாக பணமும் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் SDPI கட்சி மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா, கிளை தலைவர் தேன சீனா ஜெகபர் அலி அவர்கள். TNTJ தெற்கு தெரு கிளை பொறுப்பாளர் நெய்னா முஹம்மது அவர்கள், மற்றும் தெற்கு தெரு பொது மக்கள் மற்றும் தெற்கு தெரு இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

'/>