தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. இதுவரை 16 பேர் மட்டுமே கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் வெறும் 1.1% தான். மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 7%.
தமிழ்நாட்டு மருத்துவர்களின் தீவிர முயற்சி மற்றும் சிகிச்சையால் 411 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 4-5 நாட்களாக கொரோனா பரிசோதனை முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக 100ஐ எட்டாத கொரோனா பாதிப்பு, நேற்று 100ஐ கடந்துவிட்டது.
நேற்று 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 1477ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் தான் பாதிப்பு அதிகமாகவுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருப்பூர், ஈரோடு என கொங்கு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் திருப்பூரில் தான் பாதிப்பு எண்ணிக்கை எகிறுகிறது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 105 பேரில் 50 பேர் சென்னை, 28 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த 2 மாவட்டங்களில் மட்டுமே 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கொரோனா பாதிப்பில் முச்சதமடிக்கவுள்ள நிலையில், கோவையும் திருப்பூரும் சதமடித்த மாவட்டவங்களாக உள்ளன.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:
சென்னை - 285
கோவை - 133
திருப்பூர் - 108
திண்டுக்கல் - 74
ஈரோடு - 70
நெல்லை - 62
செங்கல்பட்டு - 53
நாமக்கல் - 50
திருச்சி, திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர் - 46
தேனி, நாகை - 43
கரூர் - 42
ராணிப்பேட்டை - 39
விழுப்புரம் - 33
தூத்துக்குடி, திருவாரூர், கடலூர் - 26
சேலம் - 24
வேலூர், தென்காசி - 22
விருதுநகர் - 19
திருப்பத்தூர் - 17
கன்னியாகுமரி - 16
திருவண்ணாமலை - 12
சிவகங்கை - 11
ராமநாதபுரம் - 10
நீலகிரி, காஞ்சிபுரம் - 9
பெரம்பலூர் - 4
கள்ளக்குறிச்சி - 3
அரியலூர் - 2.
0 Comments