அதிரை டுடே ஏப்.20
நாள்தோறும் தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசி வந்த மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்ப்பட்டுள்ளது.
பீலா ராஜேஷின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் முகக்கவசம் அணியாமல் பேசுகிறார் என்று பீலா ராஜேஷ் மீது பத்திரிக்கையாளர்கள் குற்றம் சுமத்தினர். தற்போது பத்திரிக்கையாளர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிந்துள்ள நிலையில், அவர்கள் இருவருக்கும் எங்கிருந்து யாரால் தொற்று ஏற்பட்டது என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
இந்த பத்திரிக்கையாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு உள்பட பல செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றுள்ளதால், அந்த சந்திப்புகளில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இனி தினசரி செய்தி அறிக்கை மட்டுமே மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
0 Comments