அதிரை டுடே:ஏப்.19
இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் காரணமாக நாடு முழுவதும் 144 சட்டம் அமுலில் கொண்டுவந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது இதனை அதிராம்பட்டினத்தில் வசிக்கும் நம் மக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கடைபிடித்து வருகின்றோம்.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அதிராம்பட்டினத்தில் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் சூழலில் SDPI கட்சி அதிராம்பட்டினம் நகரம் சார்பாக பல மக்கள் நல பணிகளை செய்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம் கொஞ்சம் குறைந்திருப்பதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் இந்த வேகம் மேலும் குறைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இது ஆறுதல் அடைவதற்கான தகவல்தானே தவிர, அலட்சியமாக இருப்பதற்கான நேரமல்ல என்பதை உணர்ந்து நம் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
நம் நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் விரைவில் மீள வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த விவகாரத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. இந்த விவகாரத்தில் இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளில் சிறிய தளர்வு ஏற்பட்டால் கூட, அது சமூக பரவல் என்ற நிலைக்கு நம்மை அழைத்துச் சென்று விடும். அதன் பின்னர் நிலைமையை சமாளிப்பது சாத்தியமற்றதாகி விடும். எனவே தற்போது அரசுக்கு நாம் எவ்வாறு ஒத்துழைப்பு கொடுக்கின்றோமோ இதுபோன்று இனிவரும் காலங்களில் அரசுடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயை முற்றிலும் விரட்ட நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.
இக்கட்டான சூழலில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், முஹல்லா பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இச்சூழலில் பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்க வேண்டியது நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும். என்றும் SDPI கட்சி பாதிக்கப்பட்ட மக்களோடு ஒன்றிணைந்து நிற்கிறது என்பதனை தெறிவித்து கொள்கிறேன். மேலும் அதிரையின் அனைத்து மக்களுக்கும் உதவ SDPI கட்சி அதிரை நகர தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
N.M.S. ஷாபிர் அஹமது
நகர தலைவர் SDPI கட்சி
அதிரை நகரம்.
0 Comments