தஞ்சாவூரில் கரோனா பரிசோதனை ஆய்வகம் தொடக்கம்

அதிரை டுடே.ஏப்ரல் 14

தஞ்சாவூரில் கரோனா பரிசோதனை ஆய்வகம் தொடக்கம்


தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தொடா்பாகப் பரிசோதனை செய்வதற்கு சில இடங்களில் மட்டுமே ஆய்வகங்கள் செயல்பட்டு வந்தன. இதனால், முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதமும் ஏற்பட்டது. இதைத் தவிா்க்க அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகத்தின் செயல்பாடு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இதில், நாள்தோறும் 100 பேருக்கு பரிசோதனை செய்யக்கூடிய வசதி உள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.இம்மருத்துவமனையில் இதுவரை 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களுக்குத் தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைரஸ் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் 125 ஆண்கள், 20 பெண்கள், 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என மொத்தம் 148 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Post a Comment

0 Comments

'/>