மார்ச் 1 முதல் காலாவதியான விசிட், டூரிஸ்ட், ரெசிடென்ஸ் என அனைத்து விசாக்களும் நாட்கள் நீடிப்பு..அமீரக அரசு அதிரடி அறிவிப்பு..!!!

அதிரை டுடே.ஏப்ரல் 14
மார்ச் 1 முதல் காலாவதியான விசிட், டூரிஸ்ட், ரெசிடென்ஸ் என அனைத்து விசாக்களும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் செல்லுபடியாகும்..!!! அமீரக அரசு அறிவிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரக அரசின் சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமீரக அரசால் வழங்கப்பட்டு காலாவதியான அனைத்து விசாக்கள், நுழைவு அனுமதி (entry permit) மற்றும் எமிரேட்ஸ் அடையாள அட்டை (Emirates ID) ஆகியவை இந்த ஆண்டு இறுதி வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அமீரகத்தின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையம் (Federal Authority for Identity and Citizenship) செய்தித் தொடர்பாளர் கர்னல் காமிஸ் அல் காபி கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களின், மார்ச் 1, 2020 க்குப் பிறகு காலாவதியாகும் அனைத்து வகையான அமீரக விசாக்கள், நுழைவு அனுமதி (entry permit) மற்றும் எமிரேட்ஸ் அடையாள அட்டைகள் (Emirates ID) ஆகியவை இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரையிலும் செல்லுபடியாகும்” என்று கூறியுள்ளார்.
மேலும், அமீரக ரெசிடென்ஸ் விசாவை வைத்திருப்பவர்கள் தற்போது அமீரகத்தில் இருந்தாலும் அல்லது தங்கள் சொந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கும் விசாவானது இந்த ஆண்டு இறுதி வரையிலும் செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

'/>