நாளை முதல் பொதுமன்னிப்பு பயன்படுத்தும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது:
குவைத் இந்திய தூதரகத்தின் கடந்த ஏப்ரல் 10,2020 அன்றைய ஆலோசனையின் தொடர்ச்சியாக பொது மன்னிப்பு பயனடைய விரும்பும் அனைத்து இந்தியர்களும்
நாளை 2020 ஏப்ரல் 16 முதல் 20 முதல் (காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை) பின்வரும் மையங்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
#Males(ஆண்கள்)
1. Farwaniya Governorate - Farwaniya Primary School - Girls, Block 1, Street 76
2. Jleeb Al-Shuyoukh, Naeem Bin Masoud School – boys, Block 4, Street 250
#Females( பெண்கள்)
1. Farwaniya Governorate - Al-Muthanna Primary School - Boys, Block 1, Street 122
2. Jleeb Al-Shuyoukh, Rufaida al-Aslamia primary - Girls, Block 4, Street 200
#முக்கியம் தெளிவாக படியுங்கள்:
1) செல்லுபடியாகும்(Valid Passport) இந்திய பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் உங்கள் தனிப்பட்ட
உடமைகள்/சாமான்களை எடுக்கொண்டு
மேலே குறிப்பிட்ட முகவரில் உள்ள
மையங்களை அணுகலாம், மேலும் இப்படி
செல்லும் நபர்கள் தாயகம் புறப்படும் தேதி வரை குவைத் உள்துறை அமைச்சகம் தயார் செய்துள்ள முகாம்களில் தங்க தயாராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது( உணவு தங்குமிடம் எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்)
2) பாஸ்போர்ட், சிவில் ஐடி, அவசர சான்றிதழ் போன்ற எந்தவொரு செல்லுபடியாகும் ஆவணங்கள் வைத்திருக்காத ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் பின் வரும் முகவரிக்கு செல்ல வேண்டும்
Farwaniya Primary School - Girls, Block 1, Street 76
இங்கு முதல்கட்டமாக விரல் அடையாளம் எடுக்கும் நடவடிக்கைகள் நடைபெறும். எனவே அத்தகைய நபர்கள் எந்தவொரு தனிப்பட்ட உடமைகளையும் எடுத்துச் செல்ல தேவையில்லை, ஏனெனில் அவர்கள் இந்த கட்டத்தில் இருந்து தங்குமிடங்களுக்கு உடனடியாக மாற்றப்பட மாட்டார்கள். எனவே தூதரகம் ஏற்கனவே அறிவித்த விண்ணப்பம் படியுங்கள் பூர்த்தி செய்து நடவடிக்கை முடித்து தன்னார்வலர்களிடம் வழங்கியிருந்தால் தாயம் திருப்புவதற்காக ஆவணங்களைப் பெறுவதற்கு மேலே உள்ள மையங்களையோ அல்லது தூதரகத்தையோ பார்வையிடத் தேவையில்லை.
தூதரகத்தின் செயலாக்கம் முடிந்ததும் அதற்கேற்ப அடுத்த சில நாட்களில் விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு தாயகம் திரும்புவதற்கு செய்ய வேண்டிய இறுதி நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டப்படுவார்கள் என்று தூதரகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை குறிப்பு:முகாம்களில் தங்கும் நபர்கள் Photos, வீடியோ எடுத்து அரட்டை என்ற பெயரில் சமுக வலைதளங்களில் பரப்புவது உள்ளிட்ட எதாவது செய்தால் கண்டிப்பாக சட்ட நடவடிக்கைகள் சந்திக்க வேண்டிய இருக்கும்
இரண்டு பிலிப்பைன்ஸ் பெண்கள் இப்படி மாட்டியது யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
Source: Indan embassy kuwait Official
0 Comments