கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மத்திய நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சகம் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடு இயற்கை பேரிடர் மற்றும்நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறது.
இந்நேரத்தில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு கடமை ஆற்ற வேண்டியது அவசியம். ஆனால் பெரும்பான்மையான அமைச்சர்களும், அரசாங்க ஊழியர்களும் பணிக்கு வராமல் மெத்தனப் போக்குடன் வீட்டிலேயே தங்கி விட்டனர்.
அவர்கள் அனைவரும் ஏப்ரல்20ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்.
இல்லாதவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் உத்தரவை பின் பற்றி தமிழக அரசு வணிக வரித்துறை உட்பட பல்வேறு துறையை சேர்ந்த மாநில அரசு ஊழியர்கள் ஏப்.20ம் தேதி வேலைக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரயில், பஸ் என பொதுபோக்குவரத்து ஏதுமில்லாத நிலையில் எப்படி வேலைக்கு வந்து செல்ல முடியும் என்று ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் அரசு நிர்வாகம் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது. கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய பணித்தது. அதே நேரத்தில் ஊரடங்கு தொடங்கியதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லவில்லை. என்பது குறிபிடதக்கது.
0 Comments