அதிரை டுடே:ஏப்.01
பேராவூரணியைச் சோ்ந்த ராணுவ வீரா் காஷ்மீரில் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பேராவூரணி அருகேயுள்ள களத்தூா் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் மகன் ராமச்சந்திரன் ( 50). ராணுவத்தின் 117ஆவது பட்டாலியன் படைப் பிரிவு வீரரான இவா், காஷ்மீரில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அங்கு திங்கள்கிழமை பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு ராமச்சந்திரன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேசிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ராமச்சந்திரனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது குடும்பத்தினா் கவலையில் ஆழ்ந்துள்ளனா். இறந்த ராமச்சந்திரனுக்கு மனைவி சீதாலட்சுமி, 1 மகன், 1 மகள் உள்ளனா்.
உடலை கொண்டு வர நடவடிக்கைக்கு கோரிக்கை: ராமச்சந்திரனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரின் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் களத்தூா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
0 Comments