அரசு அறிவித்த நிவாரண பொருட்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வீட்டிற்கே வரும் அரசு அறிவிப்பு


அதிரை டுடே:ஏப்.01
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். நாளை(ஏப்.2) முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் ஆரம்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நிவாரணத் தொகையை வாங்குவதற்கும், ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் ரேஷன் கடைகளில் கூட்டம் அலை மோதும் வாய்ப்பு உருவாகிவிடும். இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது, '

ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு ரேஷன் கார்டுதாரர்கள் எப்போது வரவேண்டும் என தெரிவிக்கப்படும். அதன்படி,ஒரு ரேஷன் கடையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 பேருக்கு இவ்வாறு வினியோகம் செய்யப்படும். அவரவருக்கு உரிய காலம் எது என்பது பற்றி எழுதப்பட்ட டோக்கன் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்' என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

'/>