காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

அதிரை டுடே.ஏப்ரல் 14
காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
புதுடில்லி: 21 நாள் ஊரடங்கு நாளையுடன் நிறைவுபெறும் நிலையில் பிரதமர் மோடி ( ஏப்.14 ம் தேதி ) காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . பலர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் , மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 25 ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் மாநில நிலவரம் அத்தியாவசிய பொருட்கள் சப்ளை ஆகியன குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த சனிக்கிழமை(ஏப்.,11) விவாதித்தார். இதில் பல முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்கவே தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாகவே ஒடிசா, பஞ்சாப் மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தன. இதனை தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா, மஹாராஷ்ட்டிர முதல்வர் உத்தவ்தாக்ரே ஆகியோரும், வரும் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளனர். மேற்குவங்கத்தில் வரும் ஜூன் மாதம் 10 ம் தேதி வரை பள்ளிகளை மூடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழக முதல்வர் இபிஎஸ்சும் ஊரடங்கை நீட்டிக்கவே விரும்புகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

'/>