அதிரை டுடே:மார்.25
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணத்தினால் பல சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்நிலையில், அமீரகத்தில் செயல்படுத்தப்படும் இந்திய பாஸ்போர்ட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துபாயில் இருக்கும் இந்தியத்தூதரகம் அறிவித்துள்ளது.
துபாய் மற்றும் அமீரகத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அனைத்து மையங்களிலும் செயல்படும் இந்திய பாஸ்போர்ட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று துபாயில் உள்ள இந்திய தூதரகம் (Consulate General of Dubai) செவ்வாயன்று ட்விட்டரில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சேவை ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவசரகால சேவை தேவைப்படுமெனில், தங்களின் அவசரநிலையை விளக்கும் ஆவணங்களுடன் passport.dubai@mea.gov.in என்ற மின்னஞ்சல் வழியாக தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வர முடியும்” என்றும் ஆலோசகர் தெரிவித்துள்ளார். அவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் தகவலளிப்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.
0 Comments