கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!!

அதிரை டுடே: மார்ச்25

சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பெரும் பீதியையும் அச்சத்தையும் மக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது இந்த வைரஸ்.
அது தற்போது தமிழகத்தையும் அச்சுறுத்தி ஒரு உயிரையும் வாங்கியிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

கொரோனா பாதிப்பால் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் 54வயதுடைய ஒரு நபர்அனுமதிக்கப்பட்டிருந்தார்..
 அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.. அவருக்கு மேலும் சர்க்கரை வியாதி மற்றும் உயர் அழுத்த இரத்த குறைபாடு இருந்ததாகவும் தெரிய வந்தது. இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இரங்கலையும் தெரிவித்தார்.


மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்குமாறும் வெளிநாடுகளிலிருந்து ஊருக்கு வரும் சகோதரர்கள்  வீட்டிலே தங்களை தனிமை படுத்தி பாதுகாத்து கொள்ளுமாறும் அன்போடு அதிரை டுடே சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது..

செய்திகளை உடனே அறிந்து கொள்ள!!  அதிரைடுடே..
அனைத்து வாசகர்களுக்கும் "நன்றி!!..

Post a Comment

0 Comments

'/>