கொரானா தொற்றின் போதும் கண்டு கொள்ளப்படாத பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் பகுதிகள்


அதிரை டுடே:மார்.24
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள கிராமம் ஏரிப்புறக்கரை ஊராட்சி இந்த கிராமத்தின் 1 மற்றும் 2 வது வார்டுகளாக இருப்பவை தான் பிலால் நகர் மற்றும் எம்.எஸ்.எம் நகர் பகுதிகள்

தற்போது உலகமே கொரானா வைரஸால் கதிகலங்கி நிற்கும் நிலையில் நமது மண்ணில் கொரானா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசும் தமிழக அரசும் தங்களால் இயன்ற முயற்சிகளை செய்து வருவதை அறிவோம்

தமிழத்தில் தூய்மைபணிகள் முடுக்கிவிடப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகள் பல நாட்களாக நடந்து வருவதை அறிவோம், அதிரையிலும் அதன் பேரூராட்சி நிர்வாகம் இத்தகைய சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

இதுபோன்ற தூய்மைப்பணிகள் ஏரிப்புறக்கரை கிராமத்தின் உட்புறத்திலும் நடைபெற்று வருமென நன்னம்பிக்கை கொள்கின்றோம் ஆனால் ஏரிப்புறக்கரை ஊராட்சியின் வெளிப்புற பகுதிகளான பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் பகுதிகளில் இதுவரை பெயரளவுக்குக் கூட தூய்மை பணிகள் செய்யப்படவே இல்லை, குப்பையும் சாக்கடை நீரும் ஆங்காங்கே வழமைபோல் தேங்கியுள்ளன, மிகக்குறைந்தபட்ச கடமைகளான தெருவை பெருக்கி பிளீச்சிங் பவுடர் கூட தெளிக்கப்படவே இல்லை.

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு தான் பிலால் நகர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக மக்களிடம் உள்ளக்குமுறல் இருந்தது ஆனால் ஊராட்சி நிர்வாகம் அமைந்த பின்பும் புறக்கணிப்பு தொடர்கின்றன என்றால் என்ன காரணம்?

உங்களுடைய புறக்கணிப்பிற்கு காரணம் எதுவாக இருந்தாலும் பிலால் நகர் ஒருவேளை தொற்றுக்களால் பாதிக்க நேர்ந்தால் அது ஏரிப்புறக்கரை உட்கிராமப் பகுதியை வந்தடைய மணிக்கணக்கு எல்லாம் தேவைப்படாது என்ற நிதர்சனத்தை உணர்ந்தாவது உடனடியாக தூய்மைபணிகளை துவக்க வேண்டும்.

தகவல்
சமூக ஆர்வலர்
அதிரை அமீன்

Post a Comment

0 Comments

'/>