வங்கி ஊழியா் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்-MARCH 2020

அதிரை டுடே.மார் 02 

வங்கி ஊழியர்கள் மாா்ச் 11 முதல் 13 வரை 3 நாள்கள் நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியா் சங்கங்கள் திரும்ப பெற்றுள்ளன
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 11 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியா்கள் முன்னதாக அறிவித்திருந்தார்கள் 

இந்நிலையில், நேற்று இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சாா்பில், அதன் தலைவா் ராஜ்கிரண்ராய் தலைமையில் மும்பையில் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், ஊழியா் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக வங்கிகள் கூட்டமைப்பு உறுதி அளித்தது. இதையடுத்து வரும் 11 முதல் நடத்தவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியா்கள் சங்கங்கள் வாபஸ் பெற்றுள்ளன.

3 நாள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் ஆனதை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளார்கள் 

Post a Comment

0 Comments

'/>