அதிரை டுடே.மார் 02
மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் அட்டைகள் அனைத்தும் செயலிழந்ததாகிவிடும்.
அதே சமயம், செயலிழந்த பான் எண்களைப் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
5 நிமிடத்தில் புதிய பான் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி? என்று தெரிந்து கொள்
ஆதார்கார்டுடன் பான்கார்டு இனைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
மேலும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது.
உடனே உங்கள் ஆதாரையும் பான் எண்ணையும் கீழ் உள்ள லின்ங்க் மூலம் உடனே இனைத்து கொள்ளுங்கள்.
திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.
ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.
விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்
Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.
ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள விவரங்கள் பொருந்தவில்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. உதாரணமாக பெயர் இரண்டிலும் ஒரே போல இல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எனப்படும் ரகசிய பாஸ்வேட் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதை பூர்த்தி செய்யலாம்.
மேலும் ஆதார் -பான் கார்ட் ஏற்கனவே இணைக்கபட்டு இருக்கின்றதா இல்லையா என சந்தேகிக்கும் நபர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும்.
0 Comments