குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடற்கரைத்தெரு பொதுமக்கள் சிறப்பு நோன்பு திறப்பு

அதிரை டுடே.மார்ச் 05 

குடியுரிமை திருத்த சட்டத்தை அரசு திரும்பபெற வேண்டும், அனைத்து சமுதாய மக்களும் அச்சமின்றி அமைதியான வாழ்க்கை வாழ வழி வகை செய்ய வேண்டும், உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைத்து நாடுகளும் மீளவும், இந்தியாவில் இதன் தாக்கம் வந்துவிடக்கூடாது என இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் வகையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஒரு நாள் நபில் நோன்பு வியாழக்கிழமை அதிகாலை நோற்றனர்.

இதையடுத்து, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தொடர் போராட்ட அரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்..
கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகம் பொதுமக்கள் நோன்பு திறக்க ஆண்களுக்கு பள்ளியிலும் மற்றும் பெண்களுக்கு வீடுகளில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments

'/>