சவுதி வருபவர்கள் கொரானா இல்லை என மெடிக்கல் சர்டிபிகேட்டுடன் வரவேண்டும் என சவுதி அறிவிப்பு


அதிரை டுடே:மார்.09
ஜித்தா, தம்மாம், ரியாத் இந்த மூன்று விமான நிலையங்களில் மட்டுமே உங்களால் உள் நுழைய முடியும் தரை வழி மார்கம் உள்ள அனைத்து பார்டர்களும் கொரேனா வைரசின் தாக்குதலை தடுக்க மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வருபவர்கள் பக்ரைன் வந்து தரை வழி மார்கமாக தமாம் வருவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

முக்கியமாக இந்தியாவில் இருந்து வரும் பொழுது குறிப்பாக 24 மணி நேரங்களுக்கு முன்பாக சவுதி அரேபியாவினால் அங்கிகரிக்கபட்ட இந்திய மருத்துவ மனைகளில் உங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உற்திபடுத்தும் மெடிக்கல் ரிப்போர்ட் நிச்சயம் பெற்று வர வேண்டும்

அந்த ரிப்போர்ட் 24 மணி நேரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ஆகையால் நாளை பயணம் செய்ய போகிறீர்கள் என்றால் இன்றே மெடிக்கல் ரிப்போர்ட் பெற்று கொண்டு பயணம் செய்யுங்கள்

அதுவும் சவுதி அரசு அங்கீகரிக்கபட்ட மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய வேண்டும்

போதிய விழிப்புணர்வு இல்லாமல் பலர் குறிப்பாக தமிழக மக்கள் விமான நிலையம் வரை வந்து திருப்பி அனுப்ப படுக்கிறார்கள். ஆகவே இதை உங்கள் நணபர்கள் வட்டத்தில் கூறி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

Post a Comment

0 Comments

'/>