மொபைல் இருந்தா போதும் அனைத்து அரசு சான்றிதழ்களும் விண்ணப்பிக்கலாம்.

அதிரை டுடே.மார்ச் 07
நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க கடந்த சில வருடங்களுக்கு முன்வரை தாலுக்கா அலுவலகம் சென்று அலைய வேண்டிய நிலை இருந்தது.
இன்று இணைய தளம் வசதி வந்த பிறகு அரசே ஆன்லைனில் வருவாய் துறை சார்ந்த அனைத்து சான்றிதழ்களும்  இ- சேவை மையங்களின் மூலமாக  சேவை அளித்து வருகின்றது.


தற்பொழுது ஒரு படி மேல் சென்று இந்த சேவைகள் அனைத்தும் இனி உங்கள் மொபைல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இனி வீட்டில் இருந்தே கீழ் கண்ட சான்றிதழ்களை பெற இணைய தளம் வழியாக அரசே சேவையை வழங்கி வருகின்றது.

அரசின் முக்கிய சேவைகளான

ஆதார்,

பான்கார்டு

பிஃஎப்

ஜி.எஸ்.டி

டிஜிலாக்கர்,

பாஸ்போர்ட் சேவைகள்,

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு,

வருமானச் சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
இருப்பிடச் சான்றிதழ்
குடும்பத்தில் முதல் பட்டதாரி  சான்றிதழ்
கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்
நில அடங்கள் சான்றிதழ்.
மின்கட்டணம்

தண்ணீர் கட்டணம்

தொலைபேசி கட்டணம்

மொபைல் ரீசார்ஜ்
டி.டி.ஹெச் கட்டணம்
 

இது போன்று 160 வகையான சான்றிதழ்கள் இனி வீட்டில் இருந்தே ஆன்லைனில்  மூலம் அப்ளை செய்து வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் லைவ் சாட்" வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக செயலியிலோ அல்லது சேவைகளிலோ எழும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும். இந்த வசதியை காலை 8 மணி முதல் இரவு 8 வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
எங்கும் அலையவேண்டிய நிலை இனி இல்லை.
வருவாய்த்துறை அலுவலர்கள், 'ஆன்லைன்' மூலமாக, விண்ணப்ப பரிசீலனை செய்து, சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளிக்கின்றனர்.

சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.

ஆப் இன்ஸ்டால் செய்ய

 https://play.google.com/store/apps/details?id=in.gov.umang.negd.g2c

Post a Comment

0 Comments

'/>